Saturday, February 07, 2009

ஈழமும் துரோகமும் - கி.அ.அ.அனானி


கி அ அ அனானியிடமிருந்து ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு மேட்டர் மெயிலில் வந்தது, அவர் ஸ்டைலில் "துரோகம்" மற்றும் "பிராப்பர்டி ரைட்" குறித்து ஒரு விளாசல். எப்போதும் போல் கொஞ்சம் எடிட் பண்ண வேண்டியிருந்தது, ஆனால் சூடு குறையாத வகையில் :) மேட்டரைப் பதிந்ததற்கான காரணம், பழசு தான், அதாவது கருத்துச் சுதந்திரம் !!! கி அ அ அ மேட்டர் கீழே, வாசிக்கவும்.
எ.அ.பாலா
************************************************

இலங்கையில் போரும் படுகொலைகளும் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் நடந்த / நடக்கும் துரோகங்களெல்லாம் போதாதென்று, நடந்ததையெல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் முதல்வர். பாவம்.. அவரும் என்ன செய்வார் , சுமார் 50 வருடங்களாக நடப்பது போல் "நெருப்பு பற்றி எரியும் பின் தானாக அடங்கி நீறு பூத்து விடும். பின் தனக்குத் தேவையான போது ஊதிப் பெரிதாக்கிக் கொள்ளலாம்" என்று எப்போதும் போல் கனவு கண்டு கொண்டிருந்தவரின் கனவில் மண்ணைப் போடும் படியாக தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்று அவரது ஆதரவாளர்களே வெறுத்துப் போகும் படியான அறிக்கைகளையும் ,அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றுவதில் முனைந்துவிட்டார்.

இதன் உச்ச கட்டம்தான் முதல் எதிரியாகக் கருதியவரையும், துரோகி, முதுகில் குத்தியவன், தமிழன் இல்லை என்று இருந்த மட்டும் வாய்க் கொழுப்போடு வசை பாடிவிட்டு இன்று வாய் கூசாமல் "எனது நண்பர் எம் ஜி ஆர் " என்று சொந்தம் கொண்டாடுவதும், தங்களது முயற்சியாலே தான் ஐநாவும் ,அமெரிக்காவும், இங்கிலாந்தும் ,ஜப்பானும் அறிக்கைகள் விட்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றன என்று எழுதுவதும்.

இப்படி அடுத்தவர் செய்ததை எல்லாம் , ஏதோ தன்னால் தான் நடந்தது என்று இவர் சொல்வது புதிதல்ல என்றாலும், தனது இன மக்களுக்காக உலகில் பல்வேறு நாடுகளில் உழைத்து வரும், ஆதரவு திரட்டும், போராட்டம் நடத்தும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் முயற்சிகளை, சரியோ தவறோ இதற்காக தன்னுயிரைத் தந்த முத்துக்குமார் போன்ற இளைஞர்களது அளவிட முடியாத தியாகங்களை, இதை விட கேவலமாக களவாடவும், கொச்சைப் படுத்தவும் முடியுமா என்பது சந்தேகமே.

அடுத்து ஆட்சியைத் துறக்க வேண்டாம் என்று இலங்கைத் தமிழர்களே கடிதம் மூலம் சொன்னார்களாம்!!! அதனால்தான் ஆட்சித் துணியை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறாராம். முதலில் இவரை ஆட்சியை துறக்கத் தயார் என்று அறிக்கை விடச் சொல்லி யாராவது வற்புறுத்தினார்களா என்ன? ஆட்சியைத் துறக்கவும் தயார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வெற்றுச் சவடால் அடிக்கிறீர்களே , இன்னும் ஒரு புல்லையும் பிடுங்கவில்லையே என்றுதான் கேட்கிறார்கள், அதற்காக "உருப்படியான" முன் முயற்சி ஏதேனும் எடுக்கப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவது ஞாயம் தானே?

அடுத்ததாய் இந்த மத்திய அரசின் பதவிக் காலம் முடிந்து, அடுத்த தேர்தலும் முடிந்த பின், இவர் மத்தியில் பதவியைப் பகிர்ந்தோ அல்லது எதிர்க் கட்சியாகவோ விடப் போகும் அறிக்கைகளுக்காக இளிச்சவாய்த் தமிழன் "கண்கள் பனிக்க, நெஞ்சம் இனிக்க" காத்துக் கொண்டு தான் இருக்கப் போகிறான். வேறென்ன செய்வான்? கழுதைக்கு வாக்கப் பட்டால்...என்ற பழமொழியச் சொன்னவனும் தமிழன்தானே.

இதில் கருணாநிதியைத் திட்ட, எங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது, வேறு எவனுக்கும் உரிமை இல்லை என்று அவனவன் இணையத்தில் "ப்ராபர்டி ரைட்" கொண்டாடிக் கொண்டு நெஞ்சு விம்ம ஒப்பாரி வைக்கிறான்கள். அடுத்த லெவல் அடிப்பொடிகள் அதற்கு அமாம் ஆமாம் என்று பின்னூட்ட ஜால்ரா தட்டுகின்றன.

எவனுக்கும் ரைட் இல்லை என்று சொல்லும் "அவனுக்கு" இந்த இடத்தில் ஒரு வார்த்தை. "திட்டுறவன் எப்பவும் போல கன்ஸிஸ்டண்டா திட்டிக் கொண்டுதான் இருக்கிறான், நீ தான் முன்னாடி கண்னை மூடிக்கிட்டு ஜால்ரா அடித்துக் கொண்டு இருந்தாய். இப்போது காலத்தின் கட்டாயத்தினால் கொஞ்சம் "தெளிஞ்சு" திட்ட ஆரம்பித்து இருக்கிறாய். சுய மூளையோட சிந்திக்கிறவன் , ரெகுலரா திட்டுரவன் வேணுமுன்னா உன் மேல ப்ராபர்டி ரைட் கேஸ் போடலாம். என் வேலையை நீ ஏண்டா செய்கிறாய்" என்று.


இப்படி 'திட்ட உரிமை' கொண்டாடும் தொண்டரடிப் பொடிகளுக்கும், பரம்பரையாக பராமரிப்பதால் கோயில் தங்களுக்கு "மட்டுமே" சொந்தம் என்று "பிராப்பர்டி ரைட்" பேசும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லையே, அம்பலவாணா ? ;-)கி அ அ அனானி

16 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

said...

சில்லறைத்தனமாக எரியற வீட்ல பீடி பத்த வைக்கறதை விட்டுட்டு கி.அ.அ அனானி ஈழ பிரச்சினையில் தன் கருத்து என்ன என்று சொன்னால் நல்லது.

Rajaraman said...

அடிச்சு தூள் கிளப்பி இங்கு இணைய தளத்தில் ஜல்லி அடித்துக்கொண்டிருக்கும் சில சுயவிளம்பி கேஸ்களின் முகமூடியை உருவி, அவனுங்க பாணியிலேயே சொன்னால் டவுசர் களட்டிடிங்க.

அரவிந்தன் said...

அய்யா...

ரொம்ப தெளிவா எழுதிட்டதா நினைப்பா..

கருணாநிதி எது செஞ்சாலும் அவர் சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காக அவரை கண்மூடித்தனமாக அதாவது உங்க பாணியில சொல்லமுன்னா “கண்ஸிண்ட்டா” எதிர்க்கிற நீ சிந்திப்பவனா. அல்லது தி.முக தலைவராகயிருப்பினும் அவர் அவர் தவறு செய்யும்பட்சத்தில் அவரையும் நீதித்தராசில் நிறுத்தும் நாங்கள் சிந்திப்பவர்களா...

மனசாட்சி உள்ளவர்கள்,சுயசிந்தனை இருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்

நீங்க எப்படி என்று எனக்கு தெரியவில்லலை

அரவிந்தன்
தொண்டரடிப் பொடி

said...

\\கருணாநிதி எது செஞ்சாலும் அவர் சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காக அவரை கண்மூடித்தனமாக//

ஐயா மனசாட்சி, சுயசிந்தனை திலகங்களே இன்னும் இந்த கம்ப்பியுடர் யுகத்திலும் சூத்திரன், மூத்திரன் ரீலை இன்னும் எத்தனை நாளுக்கு ஓட்டுவீர்கள்.

வேறு எதாவது மத்தி யோசிங்க

dondu(#11168674346665545885) said...

நான் கலைஞரைத்தான் ஆதரிக்கிறேன் :)))))))))

ஆகஸ்ட் 2007-ல் நான் எழுதியது இப்போதும் பொருந்துகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2007/11/blog-post_08.html

ஆமாம். ஆட்சிக் கலைப்புக்கும் கலைஞருக்கும் ராசியே இல்லை.

1976-ல் கலைக்கப்பட்ட அவரது ஆட்சி எம்ஜீஆர் அவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் அமையவே இல்லை.

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அமைஞ்ச 1989-ல் அமைந்த ஆட்சியை 1991-ல் கலைச்சாங்க. அதுக்கு அப்புறம் நடந்த தேர்தல்லே அவரும் பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டசபைக்கு செல்ல விருப்பம் இல்லாது தோல்விக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்பதாக சாக்கு சொல்லி தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது அவருக்கு பெருமை தேடித்தரவேயில்லை.

அதுவும் 1991-ல் ஈழப்பிரச்சினைக்காகவே ஆட்சிக் கலைப்பு வந்தது. சிலர் கூறுவதுபோல அதை அவர் லைட்டாக எடுத்து கொள்ளவில்லை. அது நடக்காமல் இருக்க என்னென்னவோ திரைக்கு பின்னால் செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. இது இப்போது பலருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு மறக்காது.

இப்போது மட்டும் எப்படி ஆட்சிக் கலைப்பை வரவேற்பார் என நினைக்கிறீர்கள்? பதவி போனால் உடனேயே அழகிரி கேசை தூசிதட்டி எடுப்பார்களே. கலைஞர் டி.வி.யை யார் முன்னுக்கு கொண்டுவருவதாம்?

இம்மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை கெடுப்பது நியாயமா"?

அதுவும் அந்த 1991 ஆட்சிக் கலைப்பு சமயத்தில் துக்ளக்கில் வந்த அந்த கார்டூன் இப்போதும் மனதில் நிற்கிறது. அப்போது சுப்பிரமணியம் ஸ்வாமியும் ஜெயலலிதாவும்தான் சேர்ந்து அப்போதைய பிரதமர் சந்திரசேகரிடம் கலைஞரை போட்டு கொடுத்து அவர் ஆட்சியை கலைக்க செய்தனர். முதலில், "சுப்பிரமணிய ஸ்வாமியா யாரது" என்று சீறிய கலைஞர் பிறகு பதறிப்போய் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள சுப்பிரமணிய ஸ்வாமியின் ஆதரவை பெற முயன்றதை ஒரு கார்ட்டூனில் துக்ளக் இவ்வாறு காட்டியது. கலைஞர் சுப்பிரமணிய ஸ்வாமியின் வீட்டருகில் நின்று பாடுகிறார். "சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்ய சுவாமி உனைமறந்தேன் அந்தோ". அதைப் பார்த்து அக்காலக் கட்டத்தில் நான் விடாது சிரித்த சிரிப்பு இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

ஆகவே கூறுகிறேன். கலைஞர் அவர்கள் செய்வது தவறே இல்லை. தனது சொந்த நலனை பார்த்து கொள்வது எந்த விதத்திலும் தவறு கிடையாது.

திருமங்கலம் தேர்தலுக்கு முன்னால் 27.12.2008 அன்று நடந்த பதிவர் சந்திப்பில் லக்கிலுக் அத்தேர்தலில் திமுக தோல்வி பெறுவதே நல்லது என அபிப்பிராயப்பட்டார் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

/// சில்லறைத்தனமாக எரியற வீட்ல பீடி பத்த வைக்கறதை விட்டுட்டு கி.அ.அ அனானி ஈழ பிரச்சினையில் தன் கருத்து என்ன என்று சொன்னால் நல்லது. ///

வா ராசா... பெயர் கூட காப்பிதான் அடிப்பியா? யாருகிட்டயோ கேக்க வேண்டிய கேள்வியை மாத்தி என் கிட்ட கேட்டுட்டியா?

இருந்தாலும் பரவாயில்லை ,மதிச்சு கேட்டதுனால சொல்லுறேன்

" இன்று இலங்கைத் தமிழருக்கு உடனடித் தேவை போர் நிறுத்தம். அதன் பின்னர் தான் அடுத்தது என்ன என்று யோசிக்க முடியும்.அந்தப் போர் நிறுத்தத்திற்காக தனது சக்திக்குட்பட்டது எதை வேண்டுமானுலும் செய்யத் தயாராக இருப்பவனே உண்மையான இன மான ,ஈன மான, ரோசமுள்ள தமிழினத் தலைவன்.மற்றும் தமிழனுக்கு நல்லது நினைப்பவன். அதை விடுத்து அங்கு தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில்,50 ஆண்டுகளாக நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்றேல்லாம் அறிக்கை விடுபவர் மற்றும் அவன் வரவில்லை அதனால் நான் செய்யவில்லை என அடுத்தவன் மீது பழி போடுபவரெல்லாம் வெறும் அரிப்பெடுத்த கையர் மட்டும்தான்"

இதுதான் எனது கருத்து.

கி அ அ அனானி

said...

அரவிந்தன்

உங்களை மாதிரி தொண்டரடிப் பொடியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுருக்குறது நல்ல அறிகுறிதான்.

பெர்மனென்டா எதிர்க்குறதுதான் கண்மூடித்தனம்.

"கன்சிஸ்டண்டா எதுற்குறதுனா ' தவறான விசயங்கள் நடக்கும் போது வசதிக்கேத்த மாதிரி ஆதரிக்கவும் எதிர்க்கவும் என்று மாறி மாறி செய்யாம ,தவறை சுட்டிக் காட்டி எதிர்க்குறது. நான் கன்சிஸ்டண்டா இருக்குறதுனாலதான் தவறையெல்லாம் மட்டும் எதிர்க்கிறேன்.உங்க தலைவர் நிறைய தவறு செய்யுறதுனால எனக்கு ஆதரிக்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.

( Consistent : consistent argument or idea - does not have any parts that do not match other parts)

ஆனா உங்களை மாதிரி "பெர்மனன்ட் தொண்டரடிப்பொடி" தான் கருணாநிதியை எது சொன்னாலும் பாப்பான், சூத்திரன் அப்படீன்னு ரெடிமேட் ஜல்லியை "பெர்மனன்ட்டா" தூக்கிக்கிட்டு வந்துடுரீங்க.

(Permanent :continuing to exist for a long time or for all the time in the future )

இதுவும் உங்க தப்பில்லை.அந்த அளவுக்கு "ஏறியிருக்கு" . இப்பத்தான "தெளிய ஆரம்பிக்குது " அதான் மனசாட்சி, சுயசிந்தனை பற்றியெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்களே. வாழ்த்துக்கள்.Welcome to the Club.

இரண்டி ஆங்கிலப் பதங்களுக்கு அர்த்தம் சொல்ல வாய்ப்பளித்தது பற்றி மகிழ்ச்சி :)

கி அ அ அனானி

said...

ராஜாராமன்

நன்றி

கி அ அ அனானி

said...

கி.அ.அ ராசா,

நழுவறதில உங்க சாதிக்கு ஈடு எணையே கிடையாதுறா.

கருணாநிதி பதவி விலகுவான்னு நாக்கை தொங்க போட்டுட்டு கிடந்த பலபேர் அப்செட் தான்.என்ன பண்றது ராசா?

ramachandranusha(உஷா) said...

பாவமய்யா, வயசான காலத்துல ஆளு ஆளுக்கு மொத்துவது நல்லா இல்லே. புள்ளைங்க, பேர பசங்கன்னு அது அதுங்க எம்.பி, எம்.எல்.ஏ ன்னு கனாகண்டுக்கினு இருக்குதுங்க. அதுங்களை ஏமாத்த முடியுமா? வயசானங்க எல்லாரையும்
அனுசரிச்சித்தான் போவணும்,

said...

டோண்டு ராகவன்

/// நான் கலைஞரைத்தான் ஆதரிக்கிறேன் :))))))))) ////

:)))

///ஆட்சிக் கலைப்புக்கும் கலைஞருக்கும் ராசியே இல்லை.///


இப்படி ஆட்சிக் கலைப்பை பத்தி பேசிப் பேசியே ஆட்சியை கலைச்சு விட்டுருவீங்க போலிருக்கே :)) ஆட்சி கலைப்பு பற்றி இங்கு பேச்சே இல்லை. கருணாநிதி சும்மா உதார் விட்டுவிட்டு பின் பல்டி அடிப்பது பற்றி மட்டுமே. " குடும்ப ஆரோக்கியத்துக்காக " இதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்றும் அது தப்பில்லை என்று நீங்கள் சொல்வதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

கி அ அ அனானி

said...

/// கி.உ.உ அனானி said...

கி.அ.அ ராசா,

நழுவறதில உங்க சாதிக்கு ஈடு எணையே கிடையாதுறா. ////

வா , ராசா

நீயும் எவ்வளவு நேரம்தான் நல்லவன் மாதிரி நடிப்ப? இரண்டாவது பின்னூட்டத்திலேயே உன் "ரேன்ஜ்" காட்டிட்டியே.

நீ கேட்டதுக்கு நேரதான பதில் சொல்லியிருக்குறேன்? எங்க நழுவியிருக்குறேன்.?கருணாநிதி மாதிரியே உன் கிட்டயும் பதில் இல்லை.அதான் திட்டுரதுல எறங்கிட்ட. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி.


///கருணாநிதி பதவி விலகுவான்னு நாக்கை தொங்க போட்டுட்டு கிடந்த பலபேர் அப்செட் தான்.என்ன பண்றது ராசா? ///

பொய்யை தெரிஞ்சே தலைவன் சொல்லுவான், அதை பொய்யின்னு தெரிஞ்சே கேட்டுக்கிட்டு உக்காந்துட்டு இருக்கீங்களே... இதைததான் " துரோகம் " அப்படீன்னு தலைப்புல சொல்லியிருக்கேன். இதுக்கெல்லாம் நீ அப்செட் ஆவாத ராசா.

கி அ அ அனானி

said...

ராமச்சந்திரன் உஷா மேடம்

இயற்கையாகவே பெண்களுக்கு இரக்க குணம் அதிகம். அதுவும் வயசானவங்களைப் பாத்தா அந்த இரக்கம் இன்னும் கூடுது :))

கி அ அ அனானி

குரங்கு said...

இன்னுமா அவர நீங்க நம்பிக்கிட்டு இருக்கீங்க?

said...

well said supeeeeeeeeeer

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails